Sunday, September 5, 2010

கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணங்கள்


என்னுடைய தாய் மொழி மறக்காமல் இருக்க தமிழில் எழுத முயல்கிறேன். இந்தகிருஷ்ண ஜெயந்திக்கு கை முறுக்கு, உப்பு சீடை மற்றும் வெல்ல சீடைசெய்தேன். அதற்கான செய்முறை விளக்கம் இங்கே அளித்திருக்கிறேன்.

முறுக்கு மற்றும் உப்பு சீடைக்கு வேண்டிய பொருட்கள்


அரிசி மாவு - 2 கப்
உளுத்த மாவு - 2 ஸ்பூன்
எள்ளு - 1 ஸ்பூன்
வெண்ணை - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உப்பு சீடைக்கு சிறிது தேங்காய் சேர்த்து கொள்ளலாம்.

வெல்ல சீடைக்கு வேண்டிய பொருட்கள்
அரிசி மாவு - 2 கப்
உளுத்த மாவு - 2 ஸ்பூன்
எள்ளு - 1 ஸ்பூன்
தேங்காய் - பல்லாக நறுக்கியது ஒரு பிடி
வெல்லம் - ஒண்ணரை கப்
செய்முறை

முறுக்கு உப்பு சீடைக்கு வெண்ணையை உருக்கி மேலே சொன்ன பொருட்களைமாவாக பிசைந்து கொள்ளவும். ஒரு பிடி மாவை கையில் எடுத்து மெல்லியதாகமாவை முறுக்கிக் கொண்டு முனையை இன்னொரு கையால் பிடித்து கொண்டுவட்டமாக இரண்டு சுத்து வரும் வரை சுற்றவும். இதை எண்ணையில் போட்டுபொறித்து எடுக்கவும்.

வெல்ல சீடைக்கு வெல்ல பாகு வைத்து கொண்டு தேங்காய் பல்லையும் சேர்த்து சிறிது ஆறியபின் மாவு பிசைந்து கொள்ளவும். சின்ன உருண்டைகளாக பிடித்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

1 comment :

  1. பார்ப்பதற்கு நன்றாகயிருக்கிறது. சுவை எப்படி என்பதை செய்துவிட்டு சொல்கிறோம்.

    ReplyDelete